திருப்பூர், ஜூலை 1: திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் சிஐடியு பாத்திர தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பாத்திர சங்க பொறுப்பாளர் முத்துசாமி துவக்கி வைத்து பேசினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரச் செயலாளர் நந்தகோபால் வாழ்த்தி பேசினார். இதில், பாத்திர தொழிலின் முக்கிய மூலப்பொருளான தகடுக்கு 18 சதவீதம், உற்பத்தி செய்யப்பட்ட சரக்குக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதை குறைக்க வேண்டும்.குறிப்பாக தகடுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத வரியை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும்.பாத்திர பட்டறைகளுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
மாதம், மாதம் மின் கணக்கீடு செய்ய வேண்டும்.நலிவடைந்து வரும் பாத்திர தொழிலை மூலப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்.வேலம்பாளையம் அரசு மருத்துவமனையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
The post அைணகளின் நீர்மட்டம் பாத்திர தொழிலாளர் சங்க மகாசபை கூட்டம் appeared first on Dinakaran.