அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு 

3 months ago 15

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அஸ்வத்தாமனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த செப்.19-ம் தேதியன்று உத்தரவிட்டிருந்தார்.

Read Entire Article