அவர் கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் - இளம் வீரரை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா

3 hours ago 1

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 40 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி இளம் வீரர்கள் நிரம்பி வழிகின்றனர்.

கில், சுதர்சன், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷாரூக் கான், வாஷிங்டன் சுந்தர், திவேதியா, ரஷித் கான் உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதன் காரணமாக அந்த அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இந்த தொடரில் இதுவரை மூன்று அரை சதங்களுடன் 305 ரன்களை விளாசியிருக்கும் சுப்மன் கில் கேப்டனாகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அவருக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது சுப்மன் கில் நிதானமாக தனது நேரத்தை எடுத்துக்கொண்டு அதன் பின்னர் அதிரடியாக விளையாடினார்.

முன்பை விட தற்போது அதிரடியாக பேட்டிங் செய்யும் அவர் டாட் பால்கள் சதவீதத்தையும் குறைத்துள்ளார். ஒரு பேட்ஸ்மேனாக அசத்துவது மட்டுமின்றி கேப்டனாகவும் களத்தில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்.

பீல்டர் நிற்க வைக்கும் வியூகம், பந்துவீச்சாளர்களை மாற்றுவது, தேவைக்கு ஏற்ப வீரர்களை பயன்படுத்துவது என சுப்மன் கில் கேப்டன்சியில் செய்யும் விசயங்கள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. முன்பு வளர்ந்து வரும் வீரராக இருந்த அவர் தற்போது மிகச் சிறப்பான கேப்டனாக மாறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article