அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- விறுவிறுப்பாக தொடங்கிய 8-வது சுற்று

5 months ago 20

மதுரை,

தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், முதலிடம் பிடிக்கு மாடுபிடி வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவித்துவிடப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கும் கலர் கலர் வண்ண டி-சர்ட்களை அணிந்து களத்தில் இறங்கி வருகின்றனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்படுகின்றன.

தற்போது வரை 7 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. 7 வது சுற்றுகளின் முடிவில் மொத்தம் 558 மாடுகள் களம் கண்ட நிலையில் 128 மாடுகள் பிடிபட்டன. ஏழாம் சுற்றில் பங்கேற்றவர்களில் 4 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

7 வது சுற்றுகளின் முடிவில் திருப்பரங்குன்றம் கார்த்தி 11 காளைகளை அடக்கி முதல் இடத்திலும், திருபுவனம் முரளிதரன் 10 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்திலும், அவனியாபுரம் கார்த்தி 8 காளைகளை அடக்கி 3-வது இடத்திலும் இருந்தனர்.

இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 8-வது சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் 25 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் 659 காளைகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 634 காளைகள் அனுமதிக்கப்பட்டன.

அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியின் 7-ம் சுற்றில் களம் கண்ட காளைகள் 86, பிடிபட்ட காளைகள் - 23. அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் இதுவரை மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளரக்ள் என 28 பேர் காயமடைந்துள்ளனர்.

Read Entire Article