அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு

5 months ago 21

மதுரை,

தைப்பொங்கல் திருநாளான இன்று மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டி தொடங்கியதுமுதல் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்று வருகின்றனர்.

இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார். போட்டியின்போது களத்தில் மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன் குமாரை காளை முட்டியது. இதில் படுகாயமடைந்த நவீன் குமார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read Entire Article