
சென்னை,
அல்லு அர்ஜுன் - அட்லீ படத்திற்கு இரண்டு தலைப்புகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக பேச்சு நிலவுகிறது.
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளார்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளார் அட்லீ.
இப்படத்தில் 6 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையில், இந்த படத்திற்கு அட்லீ இரண்டு தலைப்புகளை இறுதி செய்துள்ளதாக பேச்சு நிலவுகிறது. ஒன்று "ஐகான்", இது அல்லு அர்ஜுனுக்கு மிகவும் நெருக்கமானது. அவரை அவரது ரசிகர்கள் ஐகான் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். மற்றொன்று "சூப்பர் ஹீரோ". இந்த இரண்டு தலைப்புகளும் பான்-இந்திய ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.