அறிவு இருப்போர் பெரியாரை இகழ மாட்டார்கள் - சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம்

6 hours ago 3

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் மற்றும் திராவிடம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். சீமானுக்கு கண்டனம் தெரிவித்து பலரும் போராட்டம் செய்தனர். சீமானின் உருவப்படத்தை எதிர்த்து தபெதிக அமைப்பு நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில், சென்னையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பெரியார் சொல்லாதவற்றையும் சொன்னதாக அபாண்டமாக அவதூறு பரப்புகிறார்கள். தமிழ்நாட்டை ஏன் பெரியார் மண் என்கிறோம் என சில மண்ணாந்தகைகளுக்கு புரிவதில்லை. பெரியாரின் கொள்கைகளே தமிழ்நாட்டை இன்று வழிநடத்துவதால் பெரியார் மண் என்கிறோம். பெரியாரை விமர்சிக்கும் இழிவான, மலிவான அரசியல் பேர்வழிகளை புறக்கணிப்போம்.

அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியாரின் புகழை மறைக்க முடியாது. யாருக்கோ ஏஜெண்டாக சில தற்குறிகள் இங்கே அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றன. மானமும் அறிவும் இருப்போர் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள். தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கலாமா என நினைத்தால் சட்டம் தன் கடைமையை செய்யும் என்றார்.

Read Entire Article