அறந்தாங்கி அருகே மழையால் சேதமடைந்த அம்மாட்டினம் அரசு பள்ளி சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலர் ஆய்வு

4 weeks ago 4

 

அறந்தாங்கி,டிச.17: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களாக பலத்த மழை பெய்ததால் அம்மாபட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. மழையின் காரணமாக அம்மாபட்டினம் பள்ளியை சுற்றிலும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. சில வகுப்பறைகளுக்குள் மழை நீர் புகுந்தது. அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றது. இதனால் மாணவர்கள் பெரும் அவதிப்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்த சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலர் ஷேக் அப்துல்லா, வட்டார கல்வி அலுவலர் செழியன், ஆகியோர் ஆய்வு செய்து மழை தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். பின்னர் மாணவர்கள் பாதுகாப்பான வகுப்பறைக்கு மாற்றப்பட்டு அரையாண்டு தேர்வு எழுதினர். மாணவர்களுக்கு மதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டது. பிறகு தேங்கியுள்ள மழை நீரை அகற்றி டிராக்டர் மூலம் மண் நிரப்பப்பட்டு பாதைகளை சரி செய்தனர்.

The post அறந்தாங்கி அருகே மழையால் சேதமடைந்த அம்மாட்டினம் அரசு பள்ளி சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article