அறந்தாங்கி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கிளைக்கூட்டம்

3 months ago 22

 

அறந்தாங்கி, அக்.10: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் திருநாவலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை கூட்டம் நடைபெற்றது. முருகேசன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், சிபிஐ ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருநாவலூர் ஊராட்சி கீழக்குடியிருப்பு, சிவந்தான் குடியிருப்பு பொதுமக்கள், ஆசாரி சலவைத் தொழிலாளர்கள், மருத்துவர், மற்றும் பொது மயானமாக பல தலைமுறைகளாக பயன்படுத்தி வந்த அரசுக்கு சொந்தமான மயானத்தில் கட்டப்பட்டிருந்த கொட்டகையை இடித்தவர்கள் மீதும் இடிக்க பயன்படுத்த பட்ட பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்யக் கோரியும், போர்க்கால அடிப்படையில் தார்ஸ் மயான கொட்டகை கட்டி தர கோரியும் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது எனவும் இந்த போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்வது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் கிராம பொதுமக்கள் சார்பிலும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

The post அறந்தாங்கி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கிளைக்கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article