புதுடெல்லி: தமிழக, ஆந்திர, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களே விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2012-ம் ஆண்டு மறைந்த சுவாமி தயானந்த சுவாமி, டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் பலர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959, புதுச்சேரி சட்டம் 1932, ஆந்திரா மற்றும் தெலங்கானா அறநிலையத்துறை சட்டம் 1987 ஆகியவற்றின் அரசியல் சாசன செல்லுபடி தன்மையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.