அர்ஜுன் இயக்கும் 'சீதா பயணம்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

2 months ago 15

சென்னை,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான 'ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்' போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இவர் 1992-ல் வெளியான 'சேவகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' என 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து 'சொல்லிவிடவா' படத்தை இயக்கியிருந்தார். இந்தநிலையில் 6 வருடங்களுக்குப் பின் தற்போது மீண்டும் இயக்குனர் ஆகிறார் அர்ஜுன். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தநிலையில், அவர் இயக்கும் புதிய படத்துக்கு 'சீதா பயணம்' என பெயரிடப்பட்டுள்ளது. தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா இத்திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அர்ஜுன் நடிப்பில் அடுத்ததாக 'விடாமுயற்சி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஐஸ்வர்யா - நிரஞ்சன் இருவரும் காரில் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. 

Read Entire Article