அருப்புக்கோட்டையில் ஜேம்ஸ் & கோவின் கிளை துவக்கம்

3 months ago 18

 

அருப்புக்கோட்டை, அக். 17: தென்தமிழகத்தின் பிரபலமான எலக்ட்ரானிக்ஸ், மொபைல், பர்னிச்சர் விற்பனை நிறுவனம் ஜேம்ஸ்- கோவின் அருப்புக்கோட்டை கிளை இன்று துவங்கப்பட்டுள்ளது. இது ஜேம்ஸ்&கோவின் 35வது கிளை ஆகும். விருதுநகர் மாவட்டத்தில் இது 4வது கிளை ஆகும். 2 தளத்தில் அமைந்துள்ள அருப்புக்கோட்டை கிளையில் தரை தளத்தில் மொபைல்கள், லேப்டாப்கள், டிவிக்கள், சமையல் அறை சாதனங்களும், முதல் தளத்தில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஏசிகளும் நவீன டிஸ்பிளே செய்யப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை மக்களுக்கு ஒரு நவீன ஷாப்பிங் அனுபவம் தருவதுடன் இந்தியாவிலேயே முதல் முறையாக குறைந்த மாத தவணை ரூ.665ல் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கும் வகை செய்திருக்கிறது. திறப்பு விழா அதிரடி சலுகைகளாக ரூ.20000க்கு மேல் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசம், ரூ.20000க்கு மேல் ஸ்மார்ட் மொபைல் வாங்குபவர்களுக்கு ரூ.10000 பெறுமானமுள்ள ஸ்மார்ட் வாட்ச் ஏர்பாட் மற்றும் பவர் பேங்க் இலவசம். இவைகள் தவிர இன்று ஒரு நாள் மட்டும் எல்இடி டிவிகளுக்கு 70 சதவிகிதம் வரை தள்ளுபடியில் 32 இன்ச் எல்இடி டிவி வெறும் ரூ.5990க்கும், 43 இன்ச் எல்இடி டிவி வெறும் ரூ.12,990க்கும் தருகிறது. பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் 50 சதவிகிதம் வரை தள்ளுபடியில் தருகிறது.

The post அருப்புக்கோட்டையில் ஜேம்ஸ் & கோவின் கிளை துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article