அருப்புக்கோட்டையில் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

4 weeks ago 5

அருப்புக்கோட்டை, டிச.16: அருப்புக்கோட்டையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அருப்புக்கோட்டையில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வெங்கடேசப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 6300 சதுர அடி பரப்பு கொண்ட காலிமனை உள்ளது. இதனை ஆக்கிரமிப்பு செய்தவர் 30 நாட்களுக்குள் காலிசெய்து ஒப்படைக்க வேண்டும். 30 நாட்களுக்குள் ஒப்படைக்க தவறினால் இந்துசமய அறநிலைய சட்டத்தின்படி சுவாதீனம் எடுக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.

இதனை ஆக்கிரமிப்புதாரர் ஆட்சேபித்து மதுரை இணை ஆணையர் உத்தரவினை எதிர்த்து சென்னை இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். ஆணையர் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புதாரர் செலுத்த வேண்டிய பாக்கித்தொகையை முழுமையாக செலுத்தவில்லை.

எனவே இணைஆணையர் மற்றும் ஆணையர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் நாகராஜன் தலைமையில், தனிவட்டாட்சியர் ஆலயங்கள் மாரிமுத்து, அருப்புக்கோட்டை சொக்கநாதசுவாமி கோவில் செயல்அலுவலர் தேவி, விருதுநகர் சொக்கநாத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் ராமதிலகம், ஆய்வாளர் சந்திரமோகன், ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், வெங்கடேசப்பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலர் சங்கரநாராயணன், மற்றும் தெற்குத்தெரு ஐம்பதூர்தேவாங்கர் உறவின்முறை நிர்வாகிகள் முன்னிலையில் கோவிலுக்குச்சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கோவில் வசம் கொண்டுவரப்பட்டு நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

The post அருப்புக்கோட்டையில் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article