அருணாச்சல பிரதேசத்தில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது

1 month ago 5

இடாநகர்,

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்பு பகுதியில் சோதனை சாவடி ஒன்று இயங்கி வந்தது. இந்த சோதனை சாவடி வழியாக கடந்த மார்ச் 17 அன்று இரு பைக்குகள் வந்தது. அப்போது அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் பைக்கின் இருக்கைக்கு கீழ் மறைத்து வைக்கப்படிருந்த 1.440 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இரு பைக்கின் ஓட்டுநர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில் அசாமின் பிஸ்வாநாத் மாவட்டத்தில் உள்ள ஒரு டோகோபாரியிலிருந்து இந்த போதைப்பொருளை வாங்கி வந்ததாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி மேலும் இரண்டு நபர்களை பைக் சீட்டின் கீழ் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக கூறி கைது செய்தனர். இந்த நடவடிக்கையின் போது கூடுதலாக 3,057 கிலோ கிராம் கஞ்சா, இரண்டு மொபைல் போன்கள் மற்றும் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள முக்கிய சப்ளையரை கண்டறிய கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article