அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அரசு தொழிற்நுட்ப கல்லூரி அமைத்துத்தர அரசு முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-வது வட்ட மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், கந்தசாமி, வட்டச் செயலாளர் அர்ச்சுணன் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், பெட்ரோல், டீசல், காஸ் விலை யை கட்டுப்படுத்த வேண்டும். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை தடையில்லாமல் வழங்க வேண்டும். செந்துறை பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். முந்திரி பயிரை காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும். செந்துறை நகரில் அரசு தொழிற்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும். உஞ்சினி கிராமத்தில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post அரியலூர் மாவட்டம் செந்துறை நகரில் அரசு தொழிற்நுட்ப கல்லூரி அமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.