அரியலூர், பிப். 6: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு: கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இரு வார சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாண்டும் பிப்ரவரி 14 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான “கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப் பணி சிறப்பு முகாம்” அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெறகிறது.
இம்முகாமில், 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் இந்த தடுப்பூசி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அனைத்து கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.
The post அரியலூர் மாவட்ட கிராமங்களில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.