அரியலூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள்

3 weeks ago 4

அரியலூர், டிச. 31: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு ;
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் ஜனவரி 5 அன்று காலை 7.30 மணி அளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து துவங்கி நடத்தப்பட உள்ளது.

அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.
1. போட்டிகள் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆண்களுக்கு 8 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்பட உள்ளது.
2. 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்களுக்கு 10 கி.மீ தூரமும், பெண்களுக்கு 5 கி.மீ தூரமும் ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
3. போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் வயது சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வருதல் வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவராக இருந்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பதற்கான சான்றிதழ் கொண்டு வருதல் வேண்டும். ஆதார் கார்டு நகல் கொண்டு வருதல் வேண்டும்.
4. போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பரிசுத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். ஆகவே போட்டியில் கலந்துகொள்பவர்கள் அவர்களது வங்கிக்கணக்கின் விவரம் அடங்கிய புத்தக தெளிவான செராக்ஸ் நகல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.
5. போட்டிகள் நடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு வருகை தருதல் வேண்டும்.
6. போட்டியில் கலந்துகொள்பவர்கள் போட்டி நடைபெறும் நாள் 5.01.2025 அன்று காலை 6 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் தங்களது பெயரினை , வயது சான்றிதழ், மருத்துவரின் தகுதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகலுடன் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும்.
7. போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் பதிவுபெற்ற மருத்துவரிடம் இருந்து உடற்தகுதி சான்று( Fitness Certificate from Registered Medical practitioner) பெற்று வருதல் வேண்டும் , மருத்துவ முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்பு படிவத்தில் எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்களிடம் சமர்ப்பித்த பின்னரே போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
8. போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் போட்டிகளில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ மற்றும் தனிப்பட்ட பொது இழப்புகளுக்கோ போட்டியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும்
9. போட்டிகளில் கலந்துகொள்பவர்கள் தவறான விதிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பாரபட்சமும் இன்றி போட்டிகளில் இருந்து விலக்கப்படுவர்.
10. போட்டிகள் நடைபெறும்போதும் தானாக முன்வந்து போட்டியில் இருந்து விலக நினைக்கும் ஓட்டப்பந்தய வீரர்கள் அருகில் உள்ள சோதனைச்சாவடிக்கு சென்று அமைப்பாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
11. போட்டிகளில் வெற்றிப்பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000 வீதமும் இரண்டாம் பரிசாக ரூ.3,000 வீதமும், மூன்றாம் பரிசாக ரூ.2,000 வீதமும் நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றிபெறுப்வர்களுக்கு தலா ரூ.1000 வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
12. நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெற உள்ள தடங்கள் போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் அறிவிக்கப்படும்.
ஆதலால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்கள் தங்கள் வயது சான்றிதழ், பதிவுபெற்ற மருத்துவரிடம் இருந்து உடற்தகுதி சான்று( Fitness Certificate from Registered Medical practitioner) ,வங்கிக்கணக்கு புத்தக செராக்ஸ் நகல் , ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் ஜனவரி 5 அன்று காலை 6 மணிக்கு தங்கள் பெயரினை முன்பதிவு செய்து போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 7401703499 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் appeared first on Dinakaran.

Read Entire Article