அரியலூர், அக்.5: அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்ஒரு மணி நேரத்துக்கு மேல் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் அன்றாட இயல்பு வெப்பநிலையை விட 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என தகவல் விடுத்த நிலையில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மதியத்திற்கு மேல் மழை பெய்தது. அதன்படி அரியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post அரியலூர் பகுதிகளில் 1 மணிநேரம் மிதமான மழை appeared first on Dinakaran.