அரியலூர் கல்லங்குறிச்சியில் சேதமடைந்த நிழற்கூடம் இடித்து அகற்றம்

1 day ago 4

அரியலூர்-கல்லங்குறிச்சி சாலையானது முக்கிய சாலைகளில் ஒன்றாக உள்ளது. இது ஏராளமான வீடுகளும், கடைகளும் அமைந்துள்ள பகுதியாகும். அதேபோல், பள்ளி, சிமெண்டு ஆலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கட்டிடங்கள் உள்ள பகுதியாகும். இதே சாலையில் டாஸ்மாக் கடையும் அமைந்துள்ளது. இந்நிலையில், கல்லங்குறிச்சி ரவுண்டானா அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடத்தின் சுவர்கள் முழுவதும் விரிசல் விழுந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து காணப்படுகிறது.

மேலும் முழுவதும் சேதமடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கடந்த மாதம் வெளியான 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் கூடிய செய்தி வெளியிடப்பட்டது. இதனை கருத்தில் கொண்ட அதிகாரிகள் பழைய பயணிகள் நிழற் கூடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, நிழற்கூடத்தை முழுவதுமாக இடித்து, அங்கிருந்த துருப்பிடித்த கம்பிகளை அகற்றினர்.

மேலும் சுற்றிலும் இருந்த புதர்களையும் அகற்றினர். இதனால் விபத்து அபாயம் தடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், தகுந்த நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Read Entire Article