அரியலூர் மே 11: அரியலூரில் சிஐடியுவில் பதிவு செய்யப்பட்ட சங்க தலைவர், செயலாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் சிற்றம்பலம் தலைமை வகித்தார். கூட்டத்தில் மே.20ல் பொது வேலைநிறுத்தமும், மே 13ம் தேதி அனைத்து சங்கம் சார்பில் மறியல், வேன் பிரச்சாரமும், மே 17ம் தேதி காலை 10 மணிக்கு ஜெயங்கொண்டத்தில் தெருமுனை கூட்டமும், மாலை அரியலூரில் தெருமுனை கூட்டமும், அதனை தொடர்ந்து மாவட்ட மாநாடு சம்மந்தமாக பதிவு செய்யப்பட்ட சங்க ஆண்டு பேரவை மாநாடு ஜூன் மாதத்தில் நடத்தவும், ஜூலை 20ம் தேதி சிஐடியு மாவட்ட மாநாடு நடத்தி வேலைவாய்ப்பு ஆலைகளில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கவும், மே 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி, துணை தலைவர் ராஜாமணி, மெய்யப்பன் மற்றும் தையல், சாலை போக்குவரத்து, சுமை சங்க நிர்வகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post அரியலூரில் சிஐடியு மாவட்ட மாநாடு தொடர்பாக கலந்தாய்வு appeared first on Dinakaran.