*டிரைவர் உயிர் தப்பினார்
அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அருகே கேரளாவுக்கு சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீ பற்றி எரிந்தது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் மோனச்சன் (58). டாரஸ் லாரி டிரைவர். இவர் திண்டுக்கல் மாவட்டம் கரிக்காலியில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலம் பாலக்காடு செல்வதற்காக பாளையத்திலிருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இரவு சென்றார்.
அரவக்குறிச்சி அருகே உள்ள வளையப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியில் திடீரென தீ பற்றியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் மோனச்சன் சுதாரித்து லாரியை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மளமள எரிந்த தீ லாரி முழுவதும் பரவியது. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல்துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடம் வந்த அரவக்குறிச்சி காவல் துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அரவக்குறிச்சி தீயணைப்பு வாகனம் கரூர் குப்பை கிடங்கிற்கு பணி காரணமாக சென்றதால் குஜிலியம்பாறை பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு துறையினரின் வாகனம் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். ஆனால் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.இந்த விபத்து தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post அரவக்குறிச்சி அருகே கேரளாவுக்கு சிமெண்ட்ஏற்றி சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.