தேனி, அக்.10: தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை தேனி தொகுதி எம்பி தங்கதமிழ்செல்வன் வழங்கினார். தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. இதன்படி, தேனி அருகே பூதிப்புரத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்றுமுன்தினம், பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு பூதிப்புரம் பேரூராட்சி சேர்மன் கவியரசு தலைமை வகித்தார். துணை சேர்மன் பொன்னையன் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை பிருந்தாதேவி வரவேற்றார். இதில் தேனித் தொகுதி எம்.பி தங்க தமிழ்செல்வன் கலந்து கொண்டு பிளஸ்1 பயிலும் 115 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி மாணவ, மாணவியர்களை வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், போடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அய்யப்பன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேலுச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் வனிதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் எம்.பி தங்கதமிழ்ச்செல்வன் வழங்கினார் appeared first on Dinakaran.