“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் மும்மொழி வாய்ப்பு மறுக்கப்படுகிறது?” - கனிமொழிக்கு அண்ணாமலை கேள்வி

2 hours ago 2

சென்னை: தனியார் பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழிகளை கற்கும் வாய்ப்பு இருக்கும்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஏன் அது மறுக்கப்படுகிறது? என்று கனிமொழிக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழி கொள்கைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கடிதத்துக்கு பதில் பதிவை நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அண்ணாமலை, “கல்வியில் சமத்துவத்துக்காக உருவாக்கப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை ஒருதலைப்பட்சமானது அல்ல. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீது நீங்கள் திணிக்க விரும்பும் கல்வி முறை ஒருதலைபட்சமானது.

Read Entire Article