அரசு போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் உயரம் 150 செ.மீ. ஆக குறைப்பு: அரசு உத்தரவு

1 week ago 4

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் உயரம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 1985ம் ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்ட பொது சேவை விதிகளின்படி போக்குவரத்து துறையில் உடல் தகுதி நிர்ணயிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது.

அனைத்து போக்குவரத்து கழகங்களும் இதனை பின்பற்றி செயல்பட வேண்டும், இதில் போக்குவரத்து கழகங்கள் தங்களுக்கு ஏற்றார்போல் ஏதாவது மாற்றம் செய்ய நினைக்கும் பட்சத்தில் அதை இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலோடு மட்டுமே செயல்படுத்த வேண்டும். மேலும், தற்போது அனைத்து அரசு துறைகளிலும் கருணை அடிப்படையில் பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. அரசு பேருந்து நடத்துநருக்கான தகுதிகள் கடந்த 1998ம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.

இந்நிலையில், விரைவு போக்குவரத்துக் கழகத்தை தவிர்த்து இதர போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் குறைந்தபட்ச உயரம் 150 செமீ என நிர்ணயிக்க வேண்டும் என போக்குவரத்து கழக இயக்குநரகங்கள் கேட்டுக் கொண்டுள்ளது. இதை கவனமாக பரிசீலித்த அரசு, ஆண் நடத்துநருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செமீ, பெண் நடத்துநருக்கான உயரம் 150 செமீ, இரு பாலினத்தவருக்கும் குறைந்தபட்ச எடை 45 கிலோ என பொதுசேவை விதிகளில் வரையறுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல்தகுதியில் உயரம் 150 செ.மீ. ஆக குறைப்பு: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article