அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்

4 months ago 14

 

அறந்தாங்கி, பிப். 22: அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய தொழில் முனைவோருக்கு சிறப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஷ்வரர்புரத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. விழிப்புணர்வு கருத்தரங்க கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் குமார் தலைமை வகித்தார்.

விழாவில் பொறியாளர் கவியரசன் மற்றும் ஞானபிரகாசி ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட தொழில் மையத்தில் இருந்து வருகை புரிந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் அதற்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதி உதவி ஆகியவை குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முனைவர் பிரேமா வரவேற்றார். முனைவர் மங்கையர்கரசி நன்றி கூறினார்.

The post அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article