
சென்னை,
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்பட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தொலை தூர பஸ்களில் பயணிக்க முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆன்-லைன் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட செயலி (ஆப்) மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிகள் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிராமப்புற மக்கள் முன்பதிவு செய்ய வசதியாக தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழத்தின் சார்பில் இ-சேவை மையங்களிலும் பஸ்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டுமானாலும் இ-சேவை மையங்கள் மூலமாக ரத்து செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.