பெரம்பலூர்,பிப்.14: பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான அனைவருக் கும் அரசு பஸ்களில் இலவசமாகப் பயணிக்கும் வகையில் அரசு பஸ்களுக் கான பஸ் பாஸ்களை- பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா வழங்கினார். தமிழ்நாடு அரசு சார்பாக, காவல் துறையினருக்கு அவர்கள் பணிபுரியும் அந்தந்த மாவட்டங்களில் இலவசமாக அரசு (ஏசி மற்றும் விரைவுபஸ் தவிர) பஸ்களில் பயணிக்கும் வகையில் அரசு பஸ்களுக் கான பஸ் பாஸ்களை வழங்கி நடைமுறைபடுத்தி உள்ளது.
இந்தநிலையில், நேற்று (13ம் தேதி) பெரம் பலூர் மாவட்டத்தில் பணி புரியும் போலீசார் முதல் இன்ஸ் பெக்டர் வரையி லான அனைவருக்குமான பஸ் பாஸ்களை பெரம்ப லூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா மாவட்டத்தில் பணி புரியும் அனைவருக்கும் வழங்கினார். நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன் (தலைமையிடம்) கலந்து கொண்டு பஸ் பாஸ்களை வழங்கினார்.
The post அரசு பஸ்களில் பயணம் செய்ய இலவச பாஸ் appeared first on Dinakaran.