அரசு பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணன், தங்கை நூதன போராட்டம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

3 months ago 15

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அரசு பள்ளியில் பயிலும் அண்ணனும், தங்கையும் ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அருகில் உள்ள பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் மோகன்ராஜ் 8ம்வகுப்பு, மகள் கீர்த்திகா 7ம்வகுப்பு ஆகிய இருவரும் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். தங்களை பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி அண்ணன், தங்கை இருவரும் பள்ளி சீருடையில் புத்தகங்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தங்களது பாட்டியுடன் சேர்ந்து தரையில் அமர்ந்து பாடம் படித்தபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஆட்சியர் பிரசாந்த் பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து விசாரணை செய்தார். பின்னர் ஆட்சியரிடம் மாணவர்கள் அளித்த மனுவில், நாங்கள் இருவரும் பெருமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகிறோம். எங்களை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் ஆசிரியர் மனோகர் ஆகிய இருவரும் பள்ளி கழிவறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய சொல்லி வலியுறுத்துகின்றனர். இது குறித்து ஆட்சியரிடம் எனது தந்தை புகார் அளித்ததால் எங்களை பள்ளியில் ஒதுக்கி வைத்துள்ளனர். விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

The post அரசு பள்ளியில் புறக்கணிப்பதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் அண்ணன், தங்கை நூதன போராட்டம்: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article