அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி : தமிழ்நாடு அரசு

2 weeks ago 7

சென்னை : அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்று மறுநியமனம் வழங்கும் போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை(ஏப்ரல்) மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதை திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31-ஆம் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணை வழங்க அரசிடம் கோரப்பட்டிருந்தது. அக்கோரிக்கையை ஏற்க இயலாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்று தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது’ என்று பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கமளித்துள்ளார்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி : தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article