*பொதுமக்கள் கோரிக்கை
தோகைமலை : தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி குப்பாண்டியூர் அரசு பள்ளி அருகே கொடிய விசம் கொண்ட கதண்டு கூட்டினை அழிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கடவூர் வட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொசூர் ஊராட்சி குப்பாண்டியூரில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசு தொக்கப்பள்ளி அமைந்து உள்ளது. இதில் அரசு தொடக்கப்பள்ளியில் 192 குழந்தைகளும், அரசு உயர்நிலைப்பள்ளியில் 285 மாணவ மாணவி களும் பயின்று வருகின்றனர்.
குப்பாண்டியூர் உள்பட வாழைக்கிணம், ககவுண்டம்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதில் வாழைக்கிணம் பகுதியில் இருந்து குப்பாண்டியூர் பகுதிக்கு செல்லும் சாலையில் அரசு பள்ளி அருகே உள்ள புளிய மரத்தில் கொடிய விசம் கொண்ட கதண்டுகள் கூடு அமைத்து நூற்றுக்கணக்கான கதண்டுகள் உள்ளது.
இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் குழந்தைகளுக்கும், மாணவ மாணவிகளுக்கும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதேபோல் வாழைக்கிணம் குப்பாண்டியூர் சாலையில் செல்லும் பொதுமக்களையும் கொடிய விஷம் கொண்ட கதண்டுகள் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புளிய மரத்தில் உள்ள கொடிய விசம் கொண்ட கதண்டுகளால் பள்ளி குழந்தைகளுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கதண்டுகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஇப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அரசு பள்ளி அருகே கதண்டு கூட்டினை அழிக்க வேண்டும் appeared first on Dinakaran.