அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை - இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி

5 hours ago 2

புதுடெல்லி,

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 'வேலைவாய்ப்பு திருவிழா' மூலம் பிரதமர் மோடி பணி நியமன உத்தரவுகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடக்கிறது.

அதில், மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை வழங்குகிறார். அத்துடன், அவர்களிடையே உரையாற்றுகிறார்.

 

Read Entire Article