அரசு தொடக்க பள்ளிக்கு ரூ.5 லட்சத்தில் டேபிள் சேர்: எம்எல்ஏ வழங்கினார்

1 month ago 5

புழல்: மாதவரம் மண்டலம், 31வது வார்டுக்கு உட்பட்ட புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில், சென்னை அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள், அமர்ந்து படிப்பதற்கு டேபிள் சேர் இல்லை என பள்ளி சார்பில், வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில், தனியார் நிறுவனம் சார்பில் அனைத்து மாணவர்களும் அமர்ந்து படிப்பதற்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் டேபிள் சேர்கள் வழங்கப்பட்டு, அதனை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்காக வழங்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமை வகித்தார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கதிர்வேடு பாபு, பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) புஷ்பராணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு, ரூ.5 லட்சம் மதிப்பிலான டேபிள் சேர்களை மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார். இந்நிகழ்வில் மாதவரம் மண்டலக்குழு தலைவர் நந்தகோபால், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர்கள் திருவேற்காடு லயன், ரமேஷ், சிதம்பரம், காங்கிரஸ் மாநில சட்டத்துறை துணை தலைவர் வழக்கறிஞர் புழல் குபேந்திரன், மாநில செயலாளர்கள் வழக்கறிஞர் அருணாசலம், செங்குன்றம் சாந்தகுமார், மாநகராட்சி அதிகாரிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

The post அரசு தொடக்க பள்ளிக்கு ரூ.5 லட்சத்தில் டேபிள் சேர்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article