ஈரோடு, பிப். 11: நம்பியூர், மனிதம் சட்ட உதவி மையம் மற்றும் பொதுமக்கள் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நம்பியூர் பேரூராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்டில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதில், சில கடைகளை வாடகைக்கு எடுத்தவர்கள், அவற்றின் பக்கவாட்டு சுவர்களை முழுமையாக இடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால், கட்டிடத்தின் வலிமை குன்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதி இன்றி, அரசு கட்டிடத்தை இடித்து கடைகளை மாற்றியமைத்தது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறினர்.
The post அரசு கட்டிடத்தை இடித்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு appeared first on Dinakaran.