அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலுவைத்தொகையுடன் அகவிலைப்படி உயர்வை மே மாத சம்பளத்தோடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி முதல் 2 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அகவிலைப்படி உயர்வு தொடர்பாக நிதித்துறை வெளியிட்ட அரசாணையில், "ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்" தெரிவிக்கப்பட்டது.