அரசு ஊழியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடுக்கு சட்டம்: திருமாவளவனிடம் முதல்வர் உறுதி

3 days ago 6

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.கஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என கூறியிருந்தோம். இது தொடர்பாக நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றபடும் என்று உறுதி அளித்தார். பாதிக்கப்படும் மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்வது தொடர்கிறது. அதிகாரிகள் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் செயல்படுவது கவலை அளிப்பதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரிடம் தெரிவித்தோம் என்றார்.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி: திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து எஸ்சி, எஸ்டி மக்கள் மீது நடத்தப்படும் கொலைகள் வன்கொடுமைகள் குறித்து சுட்டிக்காட்டி உள்ளோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகைமாலி: தமிழ்நாட்டில் பரவலாக தீண்டாமை குற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஒருநாளில் தீர்க்க முடியாது. அரசு உறுதியாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை: தென் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மனநல மருத்துவர்களை வைத்து கவுன்சிலிங் நடத்த வேண்டும். சாதிய மோதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி இல்லை என்பதை வலியுறுத்த வேண்டும். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கான கூட்டமாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினர்.

The post அரசு ஊழியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடுக்கு சட்டம்: திருமாவளவனிடம் முதல்வர் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article