அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

3 months ago 22

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளி இசை ஆசிரியரிடம் வசூலிக்கப்பட்ட கூடுதல் ஊதியம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்து 154ஐ திரும்ப கொடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கல்யாணம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியையாக பணியாற்றியவர் ஹேமலதா. 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 2009 ஜூன் மாதம் அவருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், 2009 ஜூன் முதல், 2015ம் ஆண்டு மார்ச் வரை அதிக ஊதியம் வழங்கியதாகக் கூறி 2 லட்சத்து 60 ஆயிரத்து 154 ரூபாயை திரும்ப வசூலிக்க 2017 ஜனவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்து 154 ஆசிரியர் ஹேமலதா செலுத்தினார்.

3 ஆண்டுகளுக்கு பின், 2020ல் தன்னிடம் தவறுதலாக ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதாகக் கூறி ஹேமலதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பிடித்தம் செய்த ஊதியத்தை திரும்பக் கொடுக்குமாறு கல்வி துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ராம் மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அமர்வு, கடந்த 2017ம் ஆண்டே கூடுதல் ஊதியத் தொகையை திரும்பச் செலுத்திய மனுதாரர், 3 ஆண்டுகளுக்கு பின் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்திருப்பதை ஏற்க முடியாது. தனி நீதிபதி உத்தரவு செல்லும் எனக்கூறி, தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

 

The post அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article