அரசியல் சாசனத்தை பா.ஜனதா சிதைத்து வருகிறது - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

9 hours ago 1

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அகில இந்திய காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் டாக்டர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

தேர்தலுக்கு முன்னால் 400 இடங்களை பெறப்போவதாக பா.ஜனதா சபதம் எடுத்தது. ஆனால் 400 இடங்களை மக்கள் பா.ஜனதாவுக்கு கொடுத்திருந்தால் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தை தகர்த்து எறிந்து இருப்பார்கள்.

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் புல்டோசர் வைத்து வீடுகளை இடிக்கிறார்களோ, அதுபோல அரசியல் சாசனத்தை தூக்கி எறிந்து, சுக்கு நூறாக உடைத்து, 2-வது குடியரசு என்றும், புதிய அரசியல் சாசனம் என்றும் நிச்சயமாக பா.ஜனதா செய்திருக்கும். அதில் எனக்கு ஒன்றும் சந்தேகமே கிடையாது. ஆனால் மக்கள் அவர்களுக்கு அருதிப்பெரும்பான்மை கிடைக்காமல் செய்துவிட்டார்கள். எனினும், பா.ஜனதாவினர் தற்போது புல்டோசர் இல்லாமல் சுத்தியல், உளியை வைத்து அரசியல் சாசனத்தை சிதைத்து வருகிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம், வக்பு திருத்தச் சட்டம் ஆகியவை உளி வைத்து அரசியல் சாசனத்தை சிதைப்பதுதான். அது போல குடியேற்றம், தனிமனித உரிமைகள், கல்வி உரிமைகளை சிதைக்க தயாராக இருக்கிறார்கள். நின்று நிதானித்து சட்டம் இயற்றி வருகிறார்கள். எனவே, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article