அரசியலுக்கு வந்து பல நடிகர்கள் பின்வாங்கியுள்ளனர்; விஜய் மீது சந்தேகம் உள்ளது: இயக்குநர் பார்த்திபன் பேட்டி

5 months ago 19


சாத்தூர்: அரசியலுக்கு வந்து பல நடிகர்கள் பின்வாங்கியுள்ளனர். இதனால் விஜய் மீதும் சந்தேகம் உள்ளது என்று இயக்குநர் பார்த்திபன் தெரிவித்து உள்ளார். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பங்கேற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகர் சங்கம் தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்காக உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் அது நிறைவேறாததால் சோர்வடைந்து போகின்றது.

நடிகர்கள் ஏதாவது கருத்து கூறினால் அதன் மீதான முரண்பாடு, விவாதம் அதிகமாகி விடுகிறது. நடிகர் பேசுவதை கவனிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் பிரச்னையை கவனிப்பதில்லை. யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம் என்ற ஜனநாயகத்தில் ஏற்கனவே பல நடிகர்கள் அரசியலுக்கு வந்து பின் வாங்கியுள்ளதால் விஜய் மீதும் அந்த சந்தேகம் உள்ளது. ஆனால் நமக்குள் உள்ள சந்தேகத்தை ஊதி பெரிதாக்க வேண்டாம். இவ்வாறு கூறினார்.

The post அரசியலுக்கு வந்து பல நடிகர்கள் பின்வாங்கியுள்ளனர்; விஜய் மீது சந்தேகம் உள்ளது: இயக்குநர் பார்த்திபன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article