அரசியலில் கலைஞருக்கு துணையாக இருந்தவர்: முரசொலி செல்வம் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

3 months ago 19

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கலைஞரின் மருமகனும், முரசொலி நாளிதழின் ஆசிரியராக பணியாற்றியவருமான முரசொலி செல்வம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். கலைஞரின் சகோதரி மகனான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழின் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றினார். அரசியலில் கலைஞருக்கு துணையாக இருந்தவர். அதன் காரணமாகவே பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர்.

மிகவும் அமைதியான இயல்பு கொண்ட அவர், திமுக நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் ஆவார். முரசொலி செல்வம் அவர்களின் மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் மு.க.ஸ்டாலின், மு.க.செல்வி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், முரசொலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post அரசியலில் கலைஞருக்கு துணையாக இருந்தவர்: முரசொலி செல்வம் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article