சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்றுமுன்தினம் 20 வாகனங்களில் மட்டும் வெங்காயம் மூட்டைகள் வந்ததால் அதன் விலை உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், வெங்காயத்தின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க ேவண்டும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து நேற்று 45 வாகனங்களில் வெங்காயம் கூடுதலாக வந்தது.
இதன் காரணமாக வரத்து அதிகமாகி ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.120ல் இருந்து ரூ.65 ஆக குறைத்து விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையால் கூடுதலாக வெங்காயம் வரவழைக்கப்பட்டதால் அதன் விலை குறைந்து வருகிறது. எனவே, தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
The post அரசின் நடவடிக்கை கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயத்தின் விலை ரூ.65க்கு விற்பனை appeared first on Dinakaran.