''அரசின் அவலங்களில் இருந்து மக்களை திசைதிருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது'': டிடிவி தினகரன்

5 hours ago 2

சென்னை: அரசின் அவலங்களில் இருந்து மக்களை திசை திருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய தலைமை அலுவலகம் சென்னை அடையாறு கற்பகம் கார்டன்ஸ் முதலாவது பிரதான சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதனை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக கட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பத்தில் அவர் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அதையடுத்து பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Read Entire Article