அரக்கோணம் : அரக்கோணம் அருகே ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் அரக்கோணம் அருகே மேல்பாக்கம் வளைவுப் பகுதியில், 5 இடங்களில் தண்டவாளத்தில் கற்கள், இரும்பு போல்ட்டுகள் வைக்கப்பட்டு இருந்ததை ரயில்வே போலீசார் கண்டுப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்த போது, சாமியார் ஒருவர், சதி செயலில் ஈடுபட்டது அம்பலம் ஆகி உள்ளது. அந்த சாமியாரின் புகைப்படத்தை தமிழ்நாடு, ஆந்திராவிற்கு அனுப்பி வைத்து, போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.
சாமியாரை தீவிரமாக தேடி வந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கட்சேகுடா பகுதியில் இதே போன்று தண்டவாள இணைப்புகளில் கற்கள் வைத்துள்ளார். கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற நபரை ரயில்வே பாதுகாப்பு போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது, மேல்பாக்கத்தில் தண்டவாளத்தில் கற்கள் வைத்த சாமியார்தான் மற்றொரு இடத்தில் ரயிலை கவிழ்க்க முயற்சித்தது அம்பலம் ஆகியது. இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலம், ஹரிதுவாரை அடுத்த ஹரிப்பூர் காலன் அருகே கங்கை நதி ஓரத்தில் வசித்து வந்த ஓம்(50) என்ற அந்த நபரை தமிழ்நாடு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் முடிவு செய்துள்ளனர்.
The post அரக்கோணம் அருகே கற்கள், இரும்பு போல்ட்டுகள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய சாமியார் கைது appeared first on Dinakaran.