அய்யலூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது

4 months ago 15

வேடசந்தூர், அக். 26: அய்யலூர் அருகேயுள்ள எத்தலப்பநாயக்கனூர் பகுதியில் வடமதுரை எஸ்ஐ பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சங்கிலிக்கரடு பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தி கொண்டிருந்தது. போலீசார் அவர்களை பிடிக்க முயன்ற போது 4 பேர் தப்பியோடி விட்டனர். சிக்கிய 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் மூக்கரபிள்ளையார் கோயிலை சேர்ந்த ரஞ்சித் (24), பெருமாள் கோயில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் பணம், 2 சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய எத்தலப்பநாயக்கனூரை சேர்ந்த பாப்பன் (47), புதுப்பட்டியை சேர்ந்த ஜீவா (27), ஆர்.புதுரை சேர்ந்த சிவா (35), கோடாங்கி சின்னான்பட்டியை சேர்ந்த மெய்யப்பன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

The post அய்யலூர் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article