தஞ்சாவூர், அக். 26: மானிய விலையில் ஊட்டச்சத்து செடிகள் வினியோகம் செய்யப்படுகிறது என்று அம்மாப்பேட்டை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் வினோதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து செடிகள் தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இந்த தொகுப்பில் முருங்கை, கறிவேப்பிலை, பப்பாளி செடிகள் மற்றும் வாழைக் கட்டை ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பில் ரூ.45 அரசு மானியத்தொகை போக பொதுமக்கள் ரூ.15 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற தோட்டக்க லைத்துறை, அம்மாப்பேட்டை வட்டார அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post அம்மாப்பேட்டை தோட்டக்கலைத் துறையில் மானியத்தில் ஊட்டச்சத்து செடிகள் வினியோகம் appeared first on Dinakaran.