அம்பையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

2 months ago 11

அம்பை,டிச.17: அம்பாசமுத்திரத்தில் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் வனக்கோட்ட வனத்துறை சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், துணை இயக்குநர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று (டிச.17) காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் பாபநாசம் வனச்சரகப்பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அம்பையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article