சென்னை: அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தேர்தல் வெற்றி விழாவாக நடத்த வேண்டும் என விசிக நிர்வாகிகளுக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் முகநூல் நேரலையில் பேசியிருப்பதாவது: ஏப்.14-ம் தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் அவரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, சமத்துவ நாள் உறுதி மொழியேற்க வேண்டும். இந்த நிகழ்ச்சியையே தேர்தல் வெற்றி விழா பேரணியாக, சமத்துவ நாள் அணிவகுப்பாக நடத்த வேண்டும். இது தொடர்பாக முறையாக காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடுடன் பங்கேற்க வேண்டும்.