பெரம்பலூர், ஜன.18: வேலூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 40-ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 40-ஆம் ஆண்டு பொங்கல் மற்றும் தமிழர் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா. பரமேஷ்குமார் தலைமை வகித்தார். ஜீவானந்தம், இராஜரத்தினம், கருப்பு சாமி, சிவாஜிகணேசன், கலியபெருமாள் அர விந்தன், தமிழ்செல்வன், டாக்டர் கலியபெருமாள் பாக்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தின ராக பத்திரிக்கையாளர் புனிதப்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். வேலூர் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post அம்பேத்கர் இளைஞர் மன்றம் சார்பில் 40ம் ஆண்டு பொங்கல் விழா appeared first on Dinakaran.