சென்னை,
அம்பேத்கரை யாராலும் ஒதுக்க முடியாது என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது,
பாபாசாகேப் அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது. அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது என்பதை அமித் ஷாவும் பாஜகவினரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை இப்போது உணர்ந்திருக்கிறார்கள். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இதுதான் என நினைக்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவனாக பெருமையாக உள்ளது. என ரஞ்சித் கூறினார்.