சென்னை: ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ஏப்.19-ம் தேதி காணொலி வாயிலாக திறந்துவைக்க உள்ளார்.
ரயில்வேயில் ‘அம்ரித் பாரத்’ என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக, 508 ரயில் நிலையங்களை ரூ.24,470 கோடியில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, தெற்கு ரயில்வேயில், சென்னை கடற்கரை, பூங்கா, மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை, திரிசூலம், குரோம்பேட்டை உட்பட 40-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன.