அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான மனு: இன்று விசாரணை

4 months ago 19

புதுடெல்லி,

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் சார்பில் வக்கீல் ராம்சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, கடுமையான நிபந்தனைகளுடன் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த சூழலில் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து, ஜாமீன் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி போக்குவரத்துத் துறை லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்ட பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article